முல்லைத்தீவில் இரகசிய தகவலையடுத்து இருவர் கைது
முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பு பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர்கள் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த சந்தேக நபர்களை நேற்று (04.01.2024) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து தேராவில் இராணுவ சிற்றுண்டிச்சாலைக்கு அருகாமையில் விசேட சோதனை நடவடிக்கையினை மேற்கொண்ட போதே 2 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகள்
இதன் போது புதுக்குடியிருப்பு 10 ஆம் வட்டாரம், உடையார்கட்டு பகுதிகளை சேர்ந்த 22, 27 வயதுடைய இளைஞர்களே கைதாகியுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளின் பின் நேற்று முல்லைத்தீவு நீதிமன்றில் முற்படுத்திய போது கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்திற்கு இருவரையும் அனுப்பியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 11 மணி நேரம் முன்

சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri
