போதைப்பொருளுடன் இரண்டு பெண்கள் கைது!
கம்பஹா- மீரிகமை பகுதியில் சட்டவிரோத 'ஐஸ்' போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது இனறையதினம்(14.4.2026) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மீரிகமை பிரதேசத்தில் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாகப் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது
இவர்களிடமிருந்து கணிசமான அளவு ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்டவர்கள் 25 மற்றும் 27 வயதுடைய யுவதிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் நீர்கொழும்பு மற்றும் கந்தானை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தீவிர விசாரணை
மேற்படி யுவதிகள் நீண்டகாலமாகப் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தார்களா அல்லது இதன் பின்னணியில் உள்ள முக்கிய நபர்கள் யார் என்பது குறித்து மீரிகமை பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சந்தேகநபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 14 மணி நேரம் முன்
கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன? Manithan
முதல் நாளிலேயே தடுமாறிய ட்ரம்பின் ஹார்முஸ் முற்றுகை... அதிரடியாகக் கடந்த ஈரான் கப்பல்கள் News Lankasri
என்னை நிம்மதியா விடு, எதாவது பண்ணிக்க போறேன்.. சின்னமருமகள் சீரியல் நடிகை ஸ்வேதா கண்ணீர் வீடியோ Cineulagam
6 மாதம் தள்ளிப்போன விவாகரத்து வழக்கு.. நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam