பிள்ளையான் - சுரேஷ் சலேவை அடுத்து ஆதாரத்துடன் சிக்குகிறாரா கோட்டாபய
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சிரேஸ்ட நீதிபதி ஜனத் சில்வா வெளியிட்ட அறிக்கையை சில காலம் மறைத்து வைத்திருந்ததாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால நேற்றையதினம்(13.4.2026) குறிப்பிட்டிருந்தார்.
அதன்பின்னர் ஆட்சிக்கு வந்த ரணில் விக்ரமசிங்கவும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வெளியிடப்பட்ட அறிக்கையை மறைத்து வைத்திருந்ததாகவும் பாதுகாப்பு அமைச்சர் கூறியிருந்தார்.
கோட்டாபய ராஜபக்ச மற்றும் ரணில் விக்ரமசிங்கவினால் மறைக்கப்பட்ட அறிக்கையை குற்றத் தடுப்பு புலனாய்வுப் பிரிவினருக்கு வழங்கி விசாரணைகளை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்து இருக்கின்றார்.
இந்த அறிக்கையைில் பல உண்மைகள் மற்றும் துல்லியமான தகவல்கள் இருப்பதை அறிந்து கொண்டதை அடுத்தே அநுர விசாரணைகளை ஆரம்பிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், விரைவில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய பிரதான சுத்திரதாரி மற்றும் அவருக்கு உதவியவர்கள் யார் என்பதை மக்கள் விரைவில் அறிந்து கொள்வார்கள் எனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 7 மணி நேரம் முன்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜோடியாக நடிக்க கதிர், சரண்யா துரடியின் சம்பளம், எவ்வளவு தெரியுமா Cineulagam
கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன? Manithan
ஈரானில் இருந்து யுரேனியம் மீட்டு எடுக்கப்படும்: புதிய ஒப்பந்தம் குறித்து டிரம்ப் அதிரடி News Lankasri