அதிவேக நெடுஞ்சாலைகளில் மூன்று நாட்களில் கிடைத்த கோடி கணக்கான வருவாய்!
தமிழ்-சிங்கள புத்தாண்டை முன்னிட்டு கடந்து மூன்று நாட்டிகளில் அதிவேக நெடுஞ்சாலைகளில் கோடி கணக்கான வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு அறிவித்துள்ளது.
கடந்த 10-ஆம் திகதி முதல் 12-ஆம் திகதி வரையிலான மூன்று நாட்களில் அதிவேக நெடுஞ்சாலைகளை பயன்படுத்தி கிராமங்களுக்குச் சென்ற வாகனங்கள் மூலம் ரூ. 163.29 மில்லியன் அதாவது 165.50 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
மூன்று நாட்களில் அதிக வருவாய்
அந்த மூன்று நாட்களில் நானூற்று முப்பத்து நான்கு ஆயிரத்து முப்பத்து மூன்று வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலைகளை பயன்படுத்தியுள்ளன.

அதன்படி கடந்த 10 ஆம் திகதி 1,61,847 வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலைகளை பயன்படுத்தியதில் அன்றைய தினம் ரூ. 5,98,15,450 வருமானமும் கடந்த 11 ஆம் திகதி 1,53,807 வாகனங்களுக்காக ரூ. 5,82,08,695 வருமானமும் 12-ஆம் திகதி 1,18,684 வாகனங்களுக்காக ரூ. 4,52,66,920 வருமானமும் ஈட்டியுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தியா உட்பட பல சர்வதேச மாணவர்களின் admission offer-களை திரும்பப்பெறும் பிரித்தானிய பல்கலைக்கழகங்கள் News Lankasri
Bigg Boss 10: பாத்ரூமில் டிடிஎஃப் வாசன் செய்த திருட்டுத்தனம்! தெரியாமல் ஆட்டம் போட்ட போட்டியாளர்கள் Manithan