திருகோணமலையில் மோட்டார் சைக்கிள் விபத்து - இருவர் படுகாயம்
திருகோணமலை பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து இன்று(13.04.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீதியில் பயணித்துக் கொண்டிருந்த வேனும் மோட்டார் சைக்கிளும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
இருவர் படுகாயம்
இந்த விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். அத்துடன், காயமடைந்த இருவரும் திரியாய பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

விபத்தின் பின்னர் உடனடியாக மீட்கப்பட்ட அவர்கள், மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
தற்போது அவர்கள் இருவரும் வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Mad Max திரைப்பட பாணியில்... சவுதி ஆதரவுப் படைகளும் ஹவுதிகளும் பாலைவனத்தில் நேருக்கு நேர் News Lankasri