சீதுவையில் லொறியுடன் மோதிய மோட்டார் சைக்கிள் - 19 வயது இளைஞர் பரிதாபமாக பலி
சீதுவை - கொட்டுகொட வீதியில் நேற்றைய தினம் (12.04.2026) இடம்பெற்ற விபத்தில் 19 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து சீதுவை - கொட்டுகொட வீதியின் 3 கிலோமீற்றர் கம்பத்துக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.
கொட்டுகொட நோக்கி அதிவேகமாகப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று, அதற்கு எதிரே வந்த லொறியுடன் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
சாரதி வைத்தியசாலையில் அனுமதி
விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதி, உடனடியாக மீட்கப்பட்டு சீதுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
எனினும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இவ்விபத்தில் மீகொட பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார். இவரது சடலம் தற்போது சீதுவை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

லொறியின் சாரதி கைது
விபத்து தொடர்பாக லொறியின் சாரதி சீதுவை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
விபத்து நிகழ்ந்த விதம் குறித்து சீதுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.