நியூ டயமண்ட் கப்பல் விபத்து தொடர்பில் இரண்டு வருடங்களின் பின் வழக்கு
கிழக்குக் கடற்பிராந்தியத்தில் விபத்துக்குள்ளான நியூ டயமண்ட் கப்பல் தொடர்பில் நஷ்ட ஈடு பெற்றுக் கொள்வதற்காக இரண்டு வருடங்களின் பின் வழக்குத் தொடரப்படவுள்ளது.
இலங்கையின் கிழக்குக் கடற்பரப்பில் எரிபொருளை எடுத்துச் சென்ற நிலையில் தீவிபத்தின் காரணமாக பற்றி எறிந்த நியூ டயமன்ட் கப்பலால் சூழலுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டிருந்தது.
சமுத்திரவியல் வளங்கள் பாதுகாப்பு அதிகார சபையின் நடவடிக்கை
இந்தியாவில் இருந்து மசகு எண்ணெய் ஏற்றி வந்த போது கடந்த 2020 ஆம் ஆண்டு இந்த விபத்துச் சம்பவம் நடைபெற்றிருந்தது.
இலங்கைக் கடற்படை வள்ளங்கள் பெரும் போராட்டத்தின் பின்னர் கப்பலின் தீயை அணைப்பதில் வெற்றி கண்டிருந்தன.
எனினும் குறித்த விபத்து காரணமாக சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கான நஷ்டஈட்டை வழங்க காப்புறுதி நிறுவனத்தினால் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதுடன் அது தொடர்பில் உரிய பதிலளிக்கவும் காப்புறுதி நிறுவனம் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.
இதனையடுத்து இரண்டு வருடங்கள் கழிந்த நிலையில் குறித்த கப்பல் விபத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பில் நஷ்டஈட்டைப் பெற்றுக் கொள்ள சமுத்திரவியல் வளங்கள் பாதுகாப்பு அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது

பதினாறாவது மே பதினெட்டு 5 நாட்கள் முன்

விசா கட்டுப்பாடுகள்: பிரித்தானியாவை விட்டு வெளியேறிய பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டவர்கள் News Lankasri
