கொழும்பு சென்ற பேருந்தில் இரு பெண்களுக்கு நேர்ந்த கதி - பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை
அனுராதபுரத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற பேருந்தில் இருந்த பெண்கள் இருவர் மயக்கமடைந்துள்ளனர்.
பேருந்தில் பெண்கள் மயக்கமடைந்தவுடன் அவர்களின் தங்க நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த இளைஞன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இளைஞனை கைது செய்வதற்கு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். பேருந்தில் பயணித்த குறித்த பெண்களுக்கு இளைஞன் ரோல்ஸ் வழங்கியுள்ளார்.
அதனை உட்கொண்டவுடன் பெண்கள் இருவரும் மயமடைந்ததாக சாலியவெவ பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறான குற்ற செயல்கள் இடம்பெறும் என்பதனால் பேருந்துகளில் அடையாளம் தெரியாத நபர்களுடன் பழக வேண்டாம் என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
அடையாளம் தெரியாத நபர்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும், அடையாளம் தெரியாத நபர்கள் வழங்கும் உணவுகளை உட்கொள்ள வேண்டாம் எனவும் அவர் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
மீனாவால் அண்ணாமலை உயிருக்கு ஆபத்து.. விஜயாவின் சதியா இது! சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
70வது Filmfare விருதுகள்: விக்ரம். கார்த்தி முதல் சாய் பல்லவி, சிவகார்த்திகேயன் வரை விருதுகளை வென்ற பிரபலங்களின் பட்டியல் இதோ Cineulagam
வானதியை திருமணம் செய்துகொள்ள தயங்கும் பாண்டியன்.. நிலா தான் காரணமா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
பிரித்தானியாவில் ஆண்டுக்கு 1 மில்லியன் பவுண்டுகள் சம்பாதிக்கும் ஒருவர் எவ்வளவு வரி செலுத்த வேண்டும்? News Lankasri