யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்ட இரு பெண்கள் கைது
போதைப்பொருள் பாவனையில் இரு பெண்கள் கைது
யாழ்ப்பாணத்தில் பாழடைந்த வீடொன்றுக்குள் வைத்து போதைப்பொருளை நுகர்ந்து கொண்டிருந்த இரண்டு பெண்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர்கள் நேற்றிரவு கைதாகியுள்ள நிலையில், கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து இரண்டு கிராம் போதைப்பொருளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், போதைத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி சாயிமேனன் தலைமையிலான குழுவினரால் குறித்த பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸார் மேற்கொண்டுள்ள நடவடிக்கை
28 மற்றும் 29 வயது மதிக்கத்தக்க இரண்டு பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களை விசாரணைகளுக்கு பின்னர் நீதிமன்றத்தில்
முன்னிலைப்படுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



