புத்தாண்டு விருந்தில் திடீரென உயிரிழந்த இருவர்
அனுராதபுரம் மாவட்டத்திலுள்ள கலென்பிந்துனுவெவ பிரதேசத்தில் இடம்பெற்ற புத்தாண்டு விருந்தில் கலந்து கொண்ட இருவர் உயிரிழந்துள்ளனர்.
மதுபான விருந்தில் கலந்து கொண்ட 3 பேரில் 2 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். செனவிரத்ன மற்றும் லொக்கு பண்டார என்பவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
மதுபானம் அருந்திருக் கொண்டிருந்த மூவரும் திடீரென மயக்கமடைந்துள்ளனர். உடனடியாக அவர்களை வைத்தியசாலை அழைத்து சென்றுள்ளனர். எனினும் செல்லும் வழியிலேயே இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மற்றைய ஒருவர் அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மதுபானம் விஷமாகியதால் உயிரிழப்பு ஏற்பட்டதா என பொலிஸார் விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
25 நாட்களில் இண்டஸ்ட்ரி ஹிட் வசூல் கொடுத்த பெத்லகேம் குடும்ப யூனிட், நம்பர் 1 மலையாள படம் Cineulagam
வெனிசுலா ஒப்பந்தம் போன்று... ஈரான் எண்ணெய் மொத்தம் அமெரிக்கா கைப்பற்றும்: ட்ரம்ப் விருப்பம் News Lankasri