திருகோணமலை -ஈச்சிலம்பற்று பகுதியில் இரு வாகனங்கள் மோதி விபத்து
திருகோணமலை -ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள பூமரத்தடிச்சேனை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்ட நெல் ஏற்றும் சிறிய ரக வாகனம் சீமெந்து ஏற்றும் பாரவூர்தி மோதி விபத்துச் சம்பவித்துள்ளது.
குறித்த விபத்தானது இன்று(13) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் குறித்து தெரிய வருவதாவது, மட்டக்களப்பிலிருந்து திருகோணமலைக்கு சீமெந்து ஏற்றுவதற்காக வந்த பாரவூர்தியானது ஈச்சிலம்பற்று -பூமரத்தடிச்சேனை பகுதியிலுள்ள வீதியில் நெல் ஏற்ற நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிறியரக வாகனத்தில் நேருக்குநேர் மோதியுள்ளது.
மேலதிக விசாரணை
இந்த நேரத்தில் நெல் ஏற்றும் வாகனத்தில் யாரும் இல்லாததால் எவருக்கும் ஆபத்துக்கள் ஏற்படவில்லை.
சீமெந்து பாரவூர்தி வாகனச் சாரதியின் தூக்க கலக்கமே இவ் விபத்துக்கான காரணமென ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவருகிறது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் சிங்கம் சக மகர உற்சவம்





Foot Massge: வெறும் 5 நிமிடம் பாதங்களை மசாஜ் செய்து பாருங்க... இந்த பிரச்சினைகள் கிட்டவே வராது! Manithan
