கோவிட் தடுப்பூசி ஏற்றிய இருவர் முகம் வீக்கமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதி
கடந்த வாரம் கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலையில் தடுப்பூசி பெற்றுக் கொண்ட இருவர் சுகயீனமடைந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலையில் கோவிட் தடுப்பூசி வழங்கப்பட்டுவரும் நிலையில் யாழ்.தென்மராட்சியை சேர்ந்த 3 பெண்களும் தடுப்பூசி பெற்றுக்கொண்டு, பணி முடிந்து வீடு திரும்பிய நிலையில் திடீர் மயக்கமடைந்த நிலையில் உடனடியாக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் அவர்களில் இருவருக்கு முகம் வீக்கமடைந்துள்ளதாகவும், அவர்களை மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.





Gen Z போராட்டக்காரர்களுடன் இணைந்த ராணுவம் - நேபாளத்தையடுத்து மற்றொரு நாட்டில் ஆட்சி கவிழ்ப்பு? News Lankasri

ஜெயிலர் 2 இன்னும் ரிலீஸ் ஆகல.. அதுக்குள்ள ரஜினிகாந்த் எடுத்த அதிரடி முடிவு! என்ன தெரியுமா Cineulagam
