மன்னாரில் போதை மாத்திரைகளுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது
இலங்கை கடற்படை மற்றும் மன்னார் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் மூலம் போதை மாத்திரைகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வடமேற்கு கடற்படை கட்டளையினால் வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் வடமத்திய
கடற்படை, மன்னார் - உப்புக்குளம் பகுதியில் தேடுதல் நடவடிக்கையை
முன்னெடுத்துள்ளனர்.
இந்த தேடுதல் நடவடிக்கையில், 20 ப்ரீகாபலின் (Pregabalin) போதை மாத்திரைகளை வைத்திருந்ததற்காக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகள்
அதனையடுத்து, கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் பின்னர் அதே பகுதியில் மீண்டும் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது, ஒரு வீட்டில் இருந்து 1432
ப்ரீகாபலின் மாத்திரைகள் மற்றும் முச்சக்கரவண்டியொன்றில் இருந்து 20 மாத்திரைகளுடன் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக சட்ட நடவடிக்கைகள்
அதேவேளை, இந்த நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் சிலாவத்துறை மற்றும் மன்னார் பகுதியைச் சேர்ந்த 28 மற்றும் 29 வயதுடையவர்கள் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், சந்தேகநபர்கள் போதை மாத்திரைகள் மற்றும் முச்சக்கர வண்டியுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
15 பந்துகளில் 6 சிக்ஸர்களுடன் 47 ரன்! 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சம்பவம் செய்த வீரர் News Lankasri
மயில் செய்த வேலையால் மொத்தமாக ஜெயில் அனுப்பப்பட்ட பாண்டியன் குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri