கொழும்பில் சிக்கிய கோடிக்கணக்கான போதைப்பொருள்
தெமட்டகொட, பேஸ்லைன் வீதியில் சுமார் 02 கோடி ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தெமட்டகொட பேஸ்லைன் வீதியின் சிறிசர உயன அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது முச்சக்கரவண்டியில் ஐஸ் போதைப்பொருள் கொண்டு செல்லப்பட்ட போது ஒருகொடவத்த 'சப்பா' என்ற சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசாரணை
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முச்சக்கர வண்டியின் சாரதி பொரளை சஹஸ்புர பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதன்போது பிரதான சந்தேகநபரிடம் இருந்து 1580 கிராம் ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Bigg Boss 10: இரண்டாவது குறும்படத்தினை வெளியிட்ட விஜய் சேதுபதி... வாயடைத்துப்போன போட்டியாளர்கள் Manithan
ஏபி டிவில்லியர்ஸ் டக்அவுட்: 42 வயது வீரரின் சிக்ஸர்மழை..தென் ஆப்பிரிக்கா சாம்பியன்ஸ் வெற்றி News Lankasri