முல்லைத்தீவில் இராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்ட தமிழரின் உடல்
முல்லைத்தீவில் உயிரிழந்த தமிழ் சிவில் பாதுகாப்பு படை வீரரின் உடலம் இராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உடையார்கட்டு வடக்கில் வசித்து வந்த கந்தசாமி ஜேக்கப் என்ற 31 வயதுடைய குடும்பஸ்தரின் உடலே இவ்வாறு அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
இவர், 2012ஆம் ஆண்டு சிவில்பாதுகாப்பு திணைக்களத்தில் இணைந்துள்ளதோடு விசுவமடு சிவில் பாதுகாப்பு பயிற்சி தளத்தில் அடிப்படை பயிற்சியினை பெற்றுள்ளார்.
பூரண மரியாதை
அத்துடன், விவசாய அபிவிருத்தியினை உயர்த்தும் எண்ணக்கருவிற்கு சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் 'சுதந்திரபுரம்' திட்டத்திலும் இவர் பணியாற்றியுள்ளார்.
இவரின் இறுதிக்கிரியைகள் விசுவமடு பகுதியில் உள்ள சிவில்பாதுகாப்பு திணைக்களத்தின் தலைமை அலுவலகத்தில் சிவில் பாதுகாப்பு திணைக்கள பூரண மரியாதையுடன் நடைபெற்றுள்ளது.
மேலும், இவர் உடல் சுகயீனம் உற்ற நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 3 மணி நேரம் முன்

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri
