பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் புதிய கட்டடம் ஜனாதிபதியால் திறப்பு
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுக்கான புதிய கட்டடத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க திறந்து வைத்துள்ளார்.
குறித்த கட்டடமானது, நெதர்லாந்து அரசின் மென்கடன் திட்டத்தின் கீழ் 400 கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டு நேற்று (22.03.2024) திறக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டடத் தொகுதியில் அவசர சிகிச்சைப் பிரிவு, தீவிர சிகிச்சைப் பிரிவு, சத்திர சிகிச்சைக் கூடங்கள், குருதி சுத்திகரிப்புப் பிரிவு, கதிரியக்கப் பிரிவு, குழந்தைகளுக்கான சிகிச்சைப் பிரிவு மற்றும் நோயாளர் விடுதி ஆகியன உள்ளடக்கப்பட்டுள்ளன.
குறைவான வசதிகள்
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் காணப்படும் நான்கு ஆதார வைத்தியசாலைகளில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையும் உள்ளது.
அதேவேளை, இந்த ஆதார வைத்தியசாலைகளின் வசதிகள் குறைவாகக் காணப்படுவதால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையை அதிகளவில் நாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
நன்மையடையவுள்ள பலர்
இந்நிலையில், தற்போது புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவின் ஊடாக பலர் நன்மையடையவுள்ளனர்.
மேலும், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் புதிய கட்டடத்தைத் திறந்து வைத்ததன் பின்னர் ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் சிகிச்சைப் பிரிவுகளை சென்று பார்வையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |












மறைந்த தொகுப்பாளர் ஆனந்த கண்ணனுக்காக சூப்பர் சிங்கர் மேடையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்... வீடியோ இதோ Cineulagam

இந்தியா மீது அணுகுண்டு வீச்சு... ட்ரம்பை கொல்ல வேண்டும்: அமெரிக்காவை உலுக்கிய சம்பவத்தில் பகீர் பின்னணி News Lankasri

சத்தீஸ்கர் வெள்ளத்தில் சிக்கிய தமிழ் குடும்பம்! சுற்றுலா சென்றபோது 4 பேரும் உயிரிழந்த பரிதாபம் News Lankasri
