அம்பாறையில் காணாமல் போன பாடசாலை மாணவிகள் கண்டுபிடிப்பு
புதிய இணைப்பு
அம்பாறை (Ampara) மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புற நகர் பகுதியில் காணாமல் போன இரு பாடசாலை மாணவர்களும் உறவினர்களின் வீட்டிற்கு சென்ற நிலையில் தற்போது கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
அம்பாறை (Ampara) மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புற நகர் பகுதியில் இரு பாடசாலை மாணவிகள் காணாமல் போன சம்பவம் தொடர்பில் நிந்தவூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த பகுதியில் உள்ள பாடசாலைகளில் கல்வி கற்கும் 14 மற்றும் 16 வயது மதிக்கத்தக்க இரு மாணவிகளே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
முறைப்பாடு
இரு மாணவிகள் காணாமல் சென்றமை தொடர்பில் கடந்த 10ஆந் திகதி முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், நிந்தவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.எம். நஜீப் வழிநடத்தலில் பொலிஸ் குழு ஒன்று விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

காஷ்மீர் தாக்குதலில் திருமணமான 7 நாளில் உயிரிழந்த கணவர்.., தம்பதியினர் கடைசியாக எடுத்த வீடியோ வைரல் News Lankasri

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri

நாங்கள் உயிருடன் இருக்கிறோம்... காஷ்மீர் தாக்குதலில் கொல்லப்பட்ட கடற்படை அதிகாரி வீடியோவின் உண்மை நிலை News Lankasri
