தமிழரசுக் கட்சியின் இரு முக்கியஸ்தர்கள் பதவி விலகுவதற்கு அழுத்தம்
நடந்து முடிந்த இலங்கையின் பொது தேர்தலில் வடக்கில் இதுவரை காலமும் ஆட்சியில் நீடித்த முக்கிய கட்சி உறுப்பினர்களை மக்கள் வெளியேற்றியுள்ளமையானது, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அரசியல்களில் பெரிதும் பேசுபொருளாகியுள்ளது.
இதில் அரசியல் காரணங்களுக்காக, பொது தேர்தலுக்கு முன்னரே பிளவுபட்டிருந்த தமிழரசு கட்சியும் வடக்கில் தனது இருப்புக்களை இழந்துள்ளது.
எனினும் மொத்தமாக 6 ஆசனங்களையும், தேசியபட்டியலில் இரண்டு ஆசனங்களையும் அக்கட்சி பெற்றுள்ளது.
இதன் அடிப்படையில் தற்போது கட்சிக்குள் தேசியபட்டியலுக்கான சில போட்டி நிலைகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியானது யாழ். பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளரான மா. இளம்பிறையனை நேர்காணல் செய்திருந்தது.
இதில் கலந்துகொண்ட அவர், தமிழரசுக்கட்சியின் இரு பெண் அங்கத்தவர்களுக்கு தேசியப்பட்டியல் ஆசனங்களை வழங்குவது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாகவும், எனினும் அதற்கான எதிர்ப்புக்கள், அவர்களை வெளியேற்றுவதற்கான அழுத்தங்களும் வெளிப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |