சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்ட இருவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு
இராமநாதபுரம் - புதுக்காடு பகுதியில் சட்டவிரோதமான முறையில் மதுபான உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் இருவரை எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேக நபர்கள் இருவரும் புதுக்காடு காட்டுப் பகுதியில் மதுபான உற்பத்தியில் ஈடுப்பட்ட போதே இன்று தர்மபுரம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதுடன், அவர்களிடமிருந்து 600 லீட்டர் கோடாவும், 62 சட்டவிரோத மதுபான போத்தல்களும் மீட்கப்பட்டுள்ளன.
நிதீமன்ற உத்தரவு
இச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு இன்று(1) நீதிமன்றில் முற்படுத்திய போதே சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தர்மபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக செய்தி : எரிமலை