கடலட்டை பிடித்த 15 பேருக்கு எதிராக நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு
கிளிநொச்சி நாச்சிக்குடா பகுதியில் அனுமதிக்கப்படாத இரவு நேரத்தில் வெளிச்சம் பாச்சி கடலட்டை பிடித்த 15 பேருக்கு தலா பத்தாயிரம் மற்றும் பதினைந்தாயிரம் ரூபா தண்டப்பணம் விதித்து கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டத்துக்கு முரணான வகையில் அனுமதிக்கப்படாத இரவு வேலைகளில் வெளிச்சம் பாச்சி கடலட்டை பிடித்த 15 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்த கடற்றொழில் நீரியல் வளத்திணைக்கள அதிகாரிகள் நேற்று (01) கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் சந்தேகநபர்களை முன்னிலைப்படுத்தியிருந்தனர்.
நீதிமன்றின் தீர்ப்பு
இதன்போது ஒருவருக்கு பதினைந்தாயிரம் ரூபா தண்டபணம் விதிக்கப்பட்டுள்ளதுடன் ஏனையவர்களுக்கு தலா பத்தாயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தடை செய்யப்பட்ட தங்கூசி வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட ஒருவருக்கு பத்தாயிரம்
ரூபாய் தண்டபணம் விதிக்கப்பட்டுள்ளது.