கஞ்சாவை திருடி விற்பனை செய்ய முயன்ற நீதிமன்ற உத்தியோகத்தர் உட்பட இருவர் கைது (Photos)
மன்னாரில் கஞ்சாவை விற்பனை செய்வதற்கு முயன்ற நீதிமன்ற உத்தியோகத்தர் ஒருவரும், விற்பனை முகவர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களை இன்றைய தினம் (19.07.2023) மன்னார் விசேட பொலிஸ் புலனாய்வு பிரிவு கைது செய்துள்ளது.
மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் பணி புரியும் உத்தியோகத்தர் ஒருவர் நீதி மன்றத்தில் சான்று பொருளாக வைக்கப்பட்டிருத 3 கிலோவுக்கும் அதிகமான கஞ்சாவை திருடி இன்று காலை விற்பனைக்காக கொண்டு சென்ற நிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசாரணை

முன்னதாகவே மன்னார் நீதவான் நீதி மன்றத்தில் சான்று பொருளாக காணப்பட்ட கஞ்சாவை திருடி விற்பனை செய்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
அதேநேரம், மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் சான்று பொருளாக காணப்படும் போதை பொருட்கள் இவ்வாறு பல வருடங்களாக திருடி விற்பனை செய்யப்படுவதாகவும் சான்று பொருளாக காணப்படும் ஐஸ் போதை பொருளும் திருடி விற்பனை செய்து அதற்கு பதிலாக அஜினாமோல்ட் கலந்து வைத்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் சந்தேக நபர்களை மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |



ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri
ஆபத்தில் இருந்த கோமதி, பாண்டியன் செய்த செயலால் ஏற்பட்ட ஆபத்து... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri