திருகோணமலையில் சட்டவிரோத மண் அகழ்வு: பின்னணியில் இருவர் கைது (Photos)
திருகோணமலை -வெருகல் பிரதேசத்தின் வட்டவான் கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த இருவரை சட்டவிரோத மண் அகழ்வு தொடர்பில் ஈச்சிலம்பற்று பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த கைது சம்பவம் (28.08.2023) நேற்று இடம்பெற்றுள்ளது.
வட்டவான் கிராம அபிவிருத்திச் சங்க தலைவரான கதிர்காமத்தம்பி திருநாவுக்கரசு மற்றும் வட்டவான் மரணசங்கத் தலைவர் தர்மலிங்கம் ஜெயகாந்தன் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெருகல் - நாதனோடையில் மணல் அகழ்வதற்கு எதிராக பொதுமக்கள் நேற்று எதிர்ப்பு ஆர்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம்
இதன் பின்னனியில் இக்கைது சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
வெருகல் - நாதனோடையில் 1000 கியூப் மண் அகழ்வதற்கான அனுமதி தனியார் ஒருவருக்கு வழங்கப்பட்ட நிலையில் அப்பகுதியில் மண் அகழ்ந்தால் அது வெருகல் ஆற்றின் அணைக்கட்டை பாதிக்கும் எனவும் இதனால் அணைக்கட்டு உடைக்கப்பட்டு வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் தெரிவித்து அக்கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

இதனையடுத்து குறித்த இடத்திற்கு மணல் எடுக்க சென்ற வாகனத்தை நிறுத்தி திருப்பி அனுப்பியதாக கூறி பெரும்பாண்மை இனத்தைச் சேர்ந்த குறித்த பெண் செய்த முறைப்பாட்டையடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்களை மூதூர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை
எடுத்துள்ளதாகவும் ஈச்சிலப்பற்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 18 மணி நேரம் முன்
பண பிரச்சனையை தீர்த்த அண்ணாமலை, ஆனால் கடைசியில் மனோஜ்-ரோஹினிக்கு ஷாக்... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri