யாழில் சிறப்பு அதிரடி படையினரிடம் வசமாக சிக்கிய டிப்பர் சாரதி
யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிக் கொண்டு சென்ற டிப்பர் வாகனம் ஒன்றினையும், வெறுமனே சென்ற மற்றுமொரு டிப்பர் வாகனத்தையும் சிறப்பு அதிரடி படையினர் கைப்பற்றியுள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்றிரவு (24.01.2026) இடம்பெற்றுள்ளதுடன், இரண்டு டிப்பர்களின் சாரதிகளையும் கைது செய்து பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் சட்ட நடவடிக்கைக்காக ஒப்படைத்துள்ளனர்.
பொலிஸ் நிலையத்தில் ஒப்படைப்பு
பத்து வருடங்களுக்கு மேலாக வடமராட்சி கிழக்கு மாமுனை செம்பியன்பற்று மாற்றும் பகுதிகளில் சட்டவிரோத மணல் மண் அகழ்ந்து டிப்பர் வாகனத்தில் கொண்டு சென்று விற்பனையில் ஈடுபட்டு வந்த நபரது டிப்பர் வாகனமே சிறப்பு அதிரடி படையினாரால் கைப்பற்றபட்டு பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதில் மற்றைய டிப்பர் வாகனம் உரிய ஆவணங்களுடன் காணப்பட்டமையால் அந்த வாகனத்துடன் சாரதி விடுவிக்கப்பட்டுள்ளார். ஏனைய நபர் சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பாவில் ரத்தான நூற்றுக்கணக்கான விமானங்கள்... வெளிநாடுகளில் சிக்கிக்கொண்ட குடும்பங்கள் News Lankasri
சூரிய கிரகணத்தில் துல்லியமாக சாகசம் செய்த ஒலிம்பிக் ஸ்கேட்போர்டு வீரர்! படு வைரலாகும் வீடியோ Manithan
விஸ்வநாத் & சன்ஸ் படத்தை பார்த்துவிட்டு முதல் விமர்சனம் சொன்ன தெலுங்கு தயாரிப்பாளர்.. படம் எப்படி இருக்கு? Cineulagam