வீதியோரத்தில் கிடந்த சடலங்கள்! மரணம் தொடர்பில் எழுந்துள்ள சந்தேகம்
பதுளை - ஹாலிஎல பிரதேசத்தில் இருவேறு இடங்களில் மர்மமான முறையில் உயிரிழந்த இரண்டு இளைஞர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்த இரண்டு சடலங்களும் இன்று(12.04.2025) கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹாலிஎல தொடருந்து நிலையத்திற்குச் செல்லும் வழியில் ஒரு கோவிலுக்கு அருகிலுள்ள வீதியில் ஒரு இளைஞரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இளைஞர்களின் சடலங்கள்
இதேவேளை ஹாலிஎல நகரில் உள்ள முச்சக்கரவண்டி நிறுத்துமிடத்திற்கு அருகிலுள்ள வீதியில் உள்ள ஒரு கால்வாயில் மற்றொரு இளைஞனின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த இரண்டு இளைஞர்களின் உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
மேலும், இந்த இளைஞர்களின் சடலங்கள், தொலைதூரப் பகுதியில் கொலை செய்யப்பட்டு இந்த இடத்திற்கு கொண்டு வரப்பட்டதா? அல்லது இங்கு கொலை செய்யப்பட்டார்களா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |