யாழ். குற்றத் தடுப்புப் பிரிவினரால் இருவர் கைது
யாழில் பல்வேறு வழிப்பறிகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் கைதான இருவர் நீதிமன்றில் முன்னிலைப் படுத்தப்படவுள்ளனர்.
குறித்த சந்தேக நபர்கள், இன்றையதினம் ( 29.02.2024) யாழ் நீதிமன்றில் முன்னிலைப் படுத்தப்படவுள்ளனர்.
இது குறித்து மேலும் தெரியவருகையில், யாழ். குற்றத் தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த முறைப்பாடுகளுக்கமைய நேற்றைய தினம் (29.02.2024) யாழ் நகரப்பகுதியைச் சேர்ந்த குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸார் அறிவுறுத்தல்
இதன்போது, யாழின் பல பகுதிகளிலும் மாலை 6 மணிமுதல் இரவு 9 வரையான நேரத்துக்குள் வீதியில் பயணித்தவர்களை இலக்கு வைத்து நீண்டகாலமாக வழிப்பறியில் ஈடுபட்டு வந்துள்ளமை முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதனை தொடர்ந்து, கைதானவர்கள் பிரதான சந்தேகநபர்கள் என்பதுடன் அவர்களுக்கு எதிராக பல குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளது.
மேலும், சந்தேகநபர்கள் பலரிடம் சிறியதொகைகளைப் பறித்துள்ளனர். இருப்பினும் சிறியதொகை என்பதை கருத்திற் கொண்டு, அவர்களுக்கு எதிராக பொலிஸ் முறைப்பாடுகளைப் பதிவுசெய்ய பலரும் முன்வந்திருக்கவில்லை.
எனவே, இவ்வாறு இருக்கவேண்டாம் எனவும் இது போன்ற குற்றச்செயல்கள் தொடர்பில் பொலிஸ் முறைப்பாடு பதியப்பட வேண்டும் எனவும் பொதுமக்களிடம் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சுவிட்சர்லாந்தில் கேளிக்கை விடுதியில் தீ விபத்து: இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாட்டவர்கள் பாதிப்பு News Lankasri
வாணி ராணி சீரியல் நடிகர் முரளியை நினைவிருக்கிறதா.. இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க.. லேட்டஸ்ட் பேட்டி Cineulagam
15 பந்துகளில் 6 சிக்ஸர்களுடன் 47 ரன்! 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சம்பவம் செய்த வீரர் News Lankasri