நபரொருவர் மீது துப்பாக்கி சூடு நடத்த முயன்ற இருவர் கைது
நபரொருவர் மீது கொலை முயற்சியில் ஈடுபட்டமை தொடர்பில் தேடப்பட்டு வந்த இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்கள் தொடர்பில் கிடைத்த தகவலுக்கு அமைய, வெல்லம்பிட்டிய-சேதவத்த பிரதேசத்தில் வைத்து நேற்று (4.10.2022) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கி சூடு
இவர்கள் கடந்த 28ஆம் திகதி கிராண்ட்பாஸ் புதிய களனி பாலத்திற்கு அருகில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகிய நபரொருவரைக் கொலை செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீதிமன்ற நடவடிக்கை
சந்தேகநபர்களிடம் இருந்து ரிவால்வர் ரக துப்பாக்கி, இலக்கத்தகடு மாற்றப்பட்ட மோட்டார் சைக்கிள் மற்றும் 4 கையடக்கத் தொலைபேசிகள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
29 மற்றும் 32 வயதுடைய சந்தேகநபர்கள் அளுத்கடை இலக்கம் 4 நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

காதலியை கைவிட்ட நாஞ்சில் விஜயன்- குழந்தைக்காக செய்தாரா? வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திருநங்கை Manithan

சூட்டிங் சென்ற மாதம்பட்டி திரும்பி வீட்டுக்கு வராதது ஏன்? குழந்தைக்கு நியாயம் கேட்கும் ஜாய்! Manithan

குணசேகரன் குறித்து சாமியார் கூறிய உண்மை, அடிக்கச்சென்ற கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri
