யானை தாக்கி இருவர் பரிதாப பலி!
வெவ்வேறு இடங்களில் காட்டு யானைகள் தாக்கி இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலனறுவை , பக்கமுன, பட்டுஹேன கிராமத்துக்குள் நேற்று நுழைந்த காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் பக்கமுன, பட்டுஹேன கிராத்தைச் சேர்ந்த 62 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தை ஆவார்.
உயிரிழப்பு
காட்டு யானை ஒன்று பட்டுஹேன கிராமத்துக்குள் நுழைந்து வீடுகள் மற்றும் பயிர்களைச் சேதப்படுத்திய நிலையில் மேற்படி குடும்பஸ்தரையும் தாக்கியுள்ளது என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதேவேளை, அம்பாந்தோட்டையில் கிரிந்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒருகெம்முல்ல பிரதேசத்தில் நேற்று காட்டு யானை தாக்கி விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் இரத்தினபுரி - எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
இவர் கிரிந்த - ஒருகெம்முல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள தனது தோட்டத்தில் உள்ள பயிர்களை வன விலங்குகளிடமிருந்து பாதுகாப்பதற்காகத் தோட்டத்தில் தங்கியிருந்த போது காட்டு யானை தாக்கி உயிரிழந்துள்ளார்.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 5 நாட்கள் முன்

எதர்சையாக சீதா-மீனாவிற்கு தெரியவந்த அருண் பற்றிய உண்மை, முத்து தான் செய்தாரா?... சிறகடிக்க ஆசை எபிசோட் Cineulagam

சக்தி படித்த குணசேகரன் மறைத்து வைத்த கடிதம், யார் எழுதியது தெரியுமா, என்ன இருந்தது?.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam
