வவுனியாவில் கர்ப்பிணிப் பெண் உட்பட இருவருக்கு கொரோனா தொற்று உறுதி
covid
vavuniya
By Independent Writer
வவுனியா - பட்டானிச்சூரில் வசித்த இருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.
வவுனியா முதலாம் ஒழுங்கையில் வசித்த கர்ப்பிணிப் பெண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
அத்துடன் மற்றையவர் 6 ஆம் ஒழுங்கையில் வசிக்கும் கிளிநொச்சி பொறியியல் பீட மாணவன் என்பதுடன் அவருக்கான பரிசோதனை கிளிநொச்சியில் மேற்கொள்ளப்பட்ட போதே தொற்று உள்ளமை தெரியவந்துள்ளது.
இந்நிலையில் பட்டானிச்சூரை முடக்கும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளதாக அறியக்கிடைக்கின்றது. இதுவரையில் கொரோனாவினால் 211 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது
.






மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US