சட்டவிரோத மின்சாரக் கம்பிகளில் சிக்கி இருவர் உயிரிழப்பு
நாட்டின் இருவேறு பகுதிகளில் சட்டவிரோதமாகப் பொருத்தப்பட்டிருந்த மின்சாரக் கம்பிகளில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நிக்கவெரட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தளுக்கொல்ல பிரதேசத்தில் நபர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார் என்று நிக்கவெரட்டிய பொலிஸ் நிலையத்துக்குக் கிடைத்த தகவலுக்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
உயிரிழந்தவர் கலகெதர பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதுடைய நபராவார்.
பொலிஸார் மேலதிக விசாரணை
விவசாயக் காணியொன்றில் சட்டவிரோதமாகப் பொருத்தப்பட்டிருந்த மின்சாரக் கம்பியில் சிக்கி இவர் உயிரிழந்துள்ளமை இதுவரையிலான விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதேவேளை, தெல்தெனிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹலியத்த பிரதேசத்தில் நபர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார் என்று தெல்தெனிய பொலிஸார் தெரிவித்தனர்.
மெதமஹநுவர பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தமது பயிர்களைப் பாதுகாப்பதற்காகத் தந்தையொருவரால் சட்டவிரோதமாகப் பொருத்தப்பட்டிருந்த மின்சாரக் கம்பியில் சிக்கி, மின்சாரம் தாக்கியே இவர் உயிரிழந்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவங்கள் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.