அம்பாறையில் போதைப் பொருளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது
அம்பாறை- நிந்தவூரில் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 8 இலட்சத்திற்கும் அதிகமான பணம் மற்றும் போதைப் பொருளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது இன்று (15) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அடையாளம் காணப்பட்ட போதைப் பொருள் விற்பனை மற்றும் போதைப் பொருள் பாவனை செய்பவர்களின் வீடுகள் கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அஸாரின் பணிப்புரைக்கமைய விசேட தேடுதல் நடவடிக்கைகள் இடம்பெற்றன.
மேலதிக விசாரணை
இதன் போது ஐஸ் போதைப் பொருள் , இலத்திரனியல் தராசு , 893840 ரூபா பணத்துடன் , 29 வயது மதிக்கத்தக்க பெண் , 22 வயது மதிக்கத்தக்க ஆண் சந்தேக நபர்கள் கைதாகினர்.
மேலும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நிந்தவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இந்தியாவில் இன்றும் பிரிட்டிஷுக்கு கீழே இயங்கும் ஒரே ஒரு ரயில் நிலையம்.., எது தெரியுமா? News Lankasri

அம்பானியை அடுத்து... ஆசியாவின் இரண்டாவது பெரும் கோடீஸ்வர குடும்பம்: அவர்களின் சொத்து மதிப்பு News Lankasri
