மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு இரு தேசிய விருதுகள்
உலக சுகாதார நிறுவனத்தினால் வருடாந்தம் அனுஷ்டிக்கப்படும் சர்வதேச நோயாளர் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு சுகாதார அமைச்சின் சுகாதார தரம் மற்றும் பாதுகாப்பு பணியகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய நிகழ்வு நேற்று (7) கொழும்பில் (Colombo) இடம் பெற்றுள்ளது.
இதன்போது மன்னார் (Mannar) மாவட்ட பொது வைத்தியசாலைக்கு நோயாளிகள் பாதுகாப்பு சம்பந்தமான செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்திய வைத்தியசாலைகளுக்கிடையில் இடம்பெற்ற போட்டியில் இரு சிறப்பு விருதுகள் கிடைத்துள்ளன.
சிறப்பு விருது
இரு நூற்றுக்கும் மேற்பட்ட மத்திய மற்றும் மாகாண சுகாதார நிறுவனங்களுக்குள் அகில இலங்கை ரீதியில் இடம்பெற்ற போட்டியில் வட மாகாணத்தில் இருந்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை மாத்திரமே இந்த சிறப்பு விருதை வென்றுள்ளமை குறிப்பிட்டத்தக்கது.

இலங்கைக்கான பிரதிநிதி டாக்டர் அலோகா சிங்கா, சுகாதார அமைச்சின் செயலாளர் டாக்டர் பாலித மஹிபால மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஆகியோர் கலந்து கொண்ட இந்நிகழ்வில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் அஸாத் எம் ஹனீபா விருதுகளை பெற்றுக்கொண்டார்.
இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி கண்டதால் ஏற்பட்ட அபாய நிலை! 22ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் திட்டம்
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
அழும் குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் அடைக்கும் காப்பக ஊழியர்கள்: அதிரவைத்துள்ள ஒரு செய்தி News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan