மேலும் இரண்டு வாரங்களுக்கு பயணக்கட்டுப்பாட்டை நீடிக்க வேண்டும்!
கோவிட் தொற்றின் மூன்றாவது அலை பரவுவதை தடுப்பதற்கு, தற்போது அமுலில் இருக்கும் பயணக்கட்டுப்பாடுகளை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிரதி சுகாதார சேவை பணிப்பாளர் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார்.
கோவிட் தொற்றின் மூன்றாவது அலை பரவுவதைத் தடுப்பதற்காக விதிக்கப்பட்டுள்ள தற்போதைய பயணக் கட்டுப்பாடுகளை பொதுமக்கள் வேண்டுமென்றே மீறினால், சுகாதார அதிகாரிகளுக்கு வேறு வழியில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
கடந்த சில வாரங்களுடன் ஒப்பிடும்போது தொற்று நோயாளர்களின் வீதம் வெகுவாகக் குறைந்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், மக்கள் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி பயணக் கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.
சுட்டு வீழ்த்தப்பட்ட 100க்கும் அதிகமான உக்ரைனிய ட்ரோன்கள்: அமெரிக்க ஏவுகணை வீழ்த்திய ரஷ்யா News Lankasri
தீவிரமடையும் ட்ரம்பின் அடுத்த நகர்வு... டென்மார்க் அதிகாரிகளை சந்திக்கவிருக்கும் ரூபியோ News Lankasri
தள்ளிப்போன ஜனநாயகன்.. 'இது அதிகார துஷ்பிரயோகம்': விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த பிரபலங்கள் Cineulagam