பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த மேலும் இருவர் கைது
நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் பாதாள உலக கும்பலைச் சேர்ந்த மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாதாள உலக செயற்பாடுகளை ஒடுக்குவதற்காக உருவாக்கப்பட்ட 20 விசேட குழுக்களால் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது பாதாள உலக கும்பலுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் மேலும் 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குற்றத்தடுப்பு பிரிவினரின் சுற்றிவளைப்பு
மேல் மாகாணத்தின் தெற்கு பிராந்திய பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரின் சுற்றிவளைப்பில் ஹோகந்தர பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காலி பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரின் சுற்றிவளைப்பில் அம்பலாங்கொடை பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மார்ச் மாதம் 19ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த சுற்றிவளைப்பில் இதுவரை பாதாள உலக கும்பலைச் சேர்ந்த 2,142 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
தமிழக - இந்திய அரசியலை ஈழத் தமிழர் எப்படி எதிர்கொள்வது..! 17 மணி நேரம் முன்
மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா? ஆட்சியைப் பிடிக்க அரசியல்வாதிகளின் தந்திரம் News Lankasri
கருப்பு திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் விவரம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம் Cineulagam
ஈஸ்வரி குறித்து பார்கவி சொன்ன விஷயம், ஆடிப்போன குடும்பம்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam