டயனாவிற்கு எதிராக மேலும் இரண்டு வழக்குகள்..!
முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவிற்கு எதிராக மேலும் இரண்டு வழக்குகள் தொடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
போலி ஆவணங்களை பயன்படுத்தி நாடாளுமன்ற உறுப்பினராக கடமையாற்றியமை தொடர்பில் வழக்குத் தொடரப்பட உள்ளது.
சட்டத்திற்கு புறம்பான வகையில் அமைச்சராக பதவி வகித்து மக்களின் வரிப் பணத்தை நீண்ட காலம் துஸ்பிரயோகம் செய்துள்ளதாக வலியுறுத்தப்படவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இரு வழக்குகள்
இந்த இரண்டு குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலும் டயனாவிற்கு எதிராக மேலும் இரண்டு வழக்குகள் தொடுக்கப்பட உள்ளன.
அரசியல் அமைப்பிற்கு முரணான வகையில் நாடாளுமன்றில் அங்கம் வகித்தமை, மக்கள் வரிப் பணத்தை துஸ்பிரயோகம் செய்தமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வழக்குத் தொடரப்பட உள்ளது.
டயனா இலங்கை நாடாளுமன்றில் அங்கம் வகிக்கத் தகுதியற்றவர் என நேற்றைய தினம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |