இந்தியாவில் கைதான ஐ.எஸ். ஐ.எஸ் பயங்கரவாதிகள்: விசாரணையில் சிக்கிய மேலும் இரு இலங்கையர்கள்
ஐ.எஸ். ஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்பைப் பேணிய இலங்கையர்களின் கைது விவகாரம் குறித்து மேற்கொண்ட விசாரணையில், மேலும் இரண்டு பேர் பயங்கரவாதத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்டப்டுள்ளனர்.
பயங்கரவாதத் தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட விசேட விசாரணையில் குறித்த இருவரும், இந்தியாவில் கைது செய்யப்பட்ட 4 இலங்கையர்களுடன் தொடர்புடையவர்கள் என தெரியவந்துள்ளது.
இந்நிலையில் சந்தேகநபர்கள் மாவனெல்லை - ஹிகுல மற்றும் மாவனெல்லை - புதிய நகரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என கூறப்பட்டுள்ளது.
பயங்கரவாதத் தடுப்பு பிரிவு
இதேவேளை இந்தியாவில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்பைப் பேணிய மேலும் இரண்டு பேர் சிலாபம் - பங்கதெனிய பகுதியில் அண்மையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பயங்கரவாதத் தடுப்பு பிரிவினால் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களும் சகோதரர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam
