சட்டவிரோத செயலில் ஈடுபட்ட இருவர் கைது (video)
புத்தளத்தில் பீடி இலைகளை விற்பனை செய்ய முயற்சித்த சிலர் தப்பியோடியுள்ளதாகவும் கொள்வனவு செய்வதற்கு வருகை தந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
புத்தளம் - பாலாவி நாகவில்லு பகுதியில் வீடொன்றில் பீடி இலைகள் பொதி செய்யப்பட்டு லொறியொன்றில் ஏற்றுவதற்கு தயாராக இருந்த நிலையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தம்பபண்ணி கடற்படைப் பிரிவினருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய புத்தளம் பொலிஸாருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
விற்பனை செய்ய முற்பட்டவர்கள் தப்பியோட்டம்
இந்த நிலையில் பீடி இலைகளை விற்பனை செய்வதற்கு நடவடிக்கை மேற்கொண்ட சிலர் தப்பியோடியுள்ளதாகவும் பீடி இலைகளை கொள்வனவு செய்வதற்கு வருகைத் தந்த ஹட்டன் மற்றும் முல்லைத்தீவு பகுதிகளைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் கூறியுள்ளனர்.
44 பெட்டிகளில் அடைக்கப்பட்ட நிலையில் சுமார் 1157 கிலோ கிராம் 700 கிராம் பீடி இலைகள் கைப்பற்றப்பட்டதாகவும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட லொறியொன்றைக் கைப்பற்றியதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த பீடி இலைகள் இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு
கொண்டுவரப்பட்டிருக்கலாமென சந்தேகிப்பதாகவும் கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர்.
இதன்போது கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் சுமார் 1 கோடி ரூபாவிற்கும் அதிக பெருமதியென கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுடன் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மற்றும் பீடி இலைகளைக் கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட லொறியையும் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக தம்பபண்ணி கடற்படைப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இதற்கமைய, கைது தொடர்பான மேலதிக விசாரணைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக புத்தளம் பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.











சத்தமே இல்லாமல் நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்- பிக்பாஸ் பிரபலங்களுக்கு குவியும் வாழ்த்துகள் Manithan
