பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றம் வந்த 'ஹரக் கட்டா': ஊடகவியலாளர்களுக்கும் எச்சரிக்கை
'ஹரக் கட்டா' என அழைக்கப்படும் நந்துன் சிந்தகவை நீதிமன்றத்திற்கு அழைத்து வந்த போது அங்குள்ள அதிகாரி ஒருவர், ஊடகவியலாளர்களை எச்சரித்துள்ளார்.
தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள 'ஹரக் கட்டா', கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் இன்றையதினம்(01.09.2025) கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
இதன்போது, கடுமையான சோதனைகளுக்கு மத்தியில் மக்கள் நீதிமன்ற மண்டபத்திற்குள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், அங்கு செய்தி சேகரிக்க வந்த ஊடகவியலாளர்களை எச்சரித்த அதிகாரி ஒருவர், கணேமுல்லை சஞ்சீவவை இவ்வாறு தான் சட்டத்தரணி வேடத்தில் வந்த ஒருவர் துப்பாக்கியால் சுட்டதாக கூறினார்.
மேலதிக சாட்சிய விசாரணைகள்
அதேபோல, ஊடகவியலாளர் வேடத்திலும் குற்றவாளி ஒருவர் வந்திருக்கலாம் என்பதால் அனைவரையும் தள்ளி நிற்குமாறும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மீதொட்டமுல்லையில் வீடு புகுந்து முச்சக்கர வண்டி மற்றும் 26,000 ரூபாயை கொள்ளையடித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நந்துன் சிந்தக மமீதான விசாரணை, இன்று கொழும்பு உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றுள்ளது.
இதன்போது, கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜயரத்ன முன்னிலையில் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், மேலதிக சாட்சிய விசாரணைகள் ஒக்டோபர் 29ஆம் திகதிக்கு திகதியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



