ஆபத்தான நபரான கெஹெல்பத்தர தொடர்பில் வெளியான பல திடுக்கிடும் தகவல்கள்
இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளான கெஹெல்பத்தர பத்மே உட்பட 5 பேர் தொடர்பில் பல்வேறு தகவல்கள் அம்பலமாகி உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குற்றச்செயல்களுடன் தொடர்புடைய நூற்றுக்கும் அதிகமான உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த குழுவில் வர்த்தகர்கள் மற்றும் பல்வேறு நிலைகளை சேர்ந்த நபர்கள் உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திடுக்கிடும் தகவல்கள்
எனினும் இந்தக் குழு குறித்து இன்டர்போல், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அதேவேளை சந்தேக நபர்களுடன் கைது செய்யப்பட்ட பெண் குறித்தும் சிறப்பு விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
முக்கியமான தகவல்கள்
இந்த சந்தேக நபர்களை இலங்கைக்கு அழைத்து வந்த பின்னர் அவர்களிடம் நீண்ட நேரம் விசாரிக்கப்பட்டு வருகின்றது.
இதன் போது முன்னர் வெளியிடப்படாத பல தகவல்கள் வெளியாகக்கூடும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சந்தேக நபர்கள் பயன்படுத்திய கையடக்க தொலைபேசிகளில் இருந்து முக்கியமான தகவல்கள் வெளியாகக்கூடும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




