வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பிய பின்னர் ரணில் வெளியிட்டுள்ள முதலாவது காணொளி
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஊடகங்களுக்கு ஒரு சிறப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அவர் தனது வீட்டிலிருந்து இன்று (01) இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
ஊடக அறிக்கை
குறித்த அறிக்கையில், அவர் கைது செய்யப்பட்ட போது அவருக்கு ஆதரவாக நின்ற அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக கூறியுள்ளார்.
அத்துடன், நான் குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் கைது செய்யப்பட்டு விளக்கமறியளில் வைக்கப்பட்டு பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதிலிருந்து எனக்கு பிணை வழங்கும் வரை எனக்காக செயற்பட்ட இணையத்தளங்களுக்கு மீண்டும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.
மேலும், பிரிதொரு நாளில் உங்களை சந்திக்க எதிர்பார்த்துள்ளேன் எனவும் அவர் கூறியுள்ளார்.
வைத்தியசாலையில்
பொது நிதியை தனிப்பட்ட தேவைக்காக பயன்படுத்திய குற்றச்சாட்டில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கடந்த 22 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்க கடந்த 22 ஆம் திகதி இரவு, சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிக சர்க்கரை அளவு காரணமாக சிறைச்சாலை வைத்தியசாலையில் இருந்து 23 ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் 29 ஆம் திகதி வைத்தியசாலையில் இருந்து வெளியேறினார்.
இவ்வாறு வைத்தியசாலையை விட்டு வெளியேறிய பின்னர் ரணில் வெளியிட்ட முதலாவது ஊடக அறிக்கை இதுவாகும். மேலும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டு மக்களுக்கு எதிர்வரும் 6 ஆம் திகதி விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார்.





Ethirneechal: தடபுடலாக நடக்கும் தர்ஷன் கல்யாணம்.. பதற்றத்தில் அறிவுக்கரசி- பொண்ணு யார் தெரியுமா? Manithan
