பேருந்து கட்டணம் குறித்து வெளியான தகவல்
எரிபொருள் விலை குறைக்கப்பட்டாலும் பேருந்து கட்டணம் குறைக்கப்படாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின்படி, ஆகஸ்ட் 31 ஆம் திகதி நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைக்கப்பட்டது.
விலைகளில் எவ்வித மாற்றமும்
அதன்படி, 289 ரூபாவாக இருந்த ஒரு லீற்றர் ஒட்டோ டீசலின் புதிய விலை 283 ரூபாவாகவும், 325 ரூபாவாக இருந்த சுப்பர் டீசல் ஒரு லீற்றரின் விலை 313 ரூபாவாகவும், 305 ரூபாவாக இருந்த ஒக்டேன் 92 ரக பெட்ரோல் ஒரு லீற்றரின் விலை 299 ரூபாவாகவும் குறைக்கப்பட்டது.
ஆனால், ஒக்டேன் 95 ரக பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை.
எவ்வாறிருப்பினும், பேருந்து கட்டணம் குறைக்கப்படாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



