யாழில் கோர விபத்து : இரு இளைஞர்கள் பலி
யாழ்ப்பாணம் கோப்பாயில் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
கோப்பாய் பிரதேச செயலகத்திற்கு நேற்று(04.05.2026) நள்ளிரவு மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த இரு இளைஞர்கள் வேக கட்டுப்பாட்டை இழந்து வீட்டின் மதிலுடன் மோதியதில் குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கோப்பாய் பொலிஸார் விசாரணை
யாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறை நோக்கிப் பயணித்தவேளை குறித்த விபத்து இடம் பெற்றுள்ளது.
இதன்போது கரவெட்டி வடக்கைச் சேர்ந்த சிவதாசன் துசிந்தன் (22), ஏழுமலை துசாந்தன் (24) ஆகிய இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளனர்.
இருவரதும் சடலமும் பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்து சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இன்று வெளியாகும் விஜயின் இறுதி தீர்மானத்திற்காக காத்திருக்கும் தமிழகம்! வரலாற்று திருப்பத்தில் தமிழ்நாட்டு அரசியல்களம்

365 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை - பிரித்தானிய அமைப்பில் இடம்பிடித்த தமிழ்நாட்டு பெண் News Lankasri
முத்துவேலுக்கு புற்றுநோய் என தெரிந்ததும் பாண்டியன் செய்த காரியம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
கடைக்கு வந்து மனோஜிடம் சிரித்து பேசிக்கொண்டிருந்த ரோஹினி, அதிரடி காட்டிய விஜயா.... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam