மட்டக்களப்பில் பதற்றம் : பொலிஸாரின் தாக்குதலில் இருவர் காயம்
மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் பகுதியில் பொலிஸாரின் தாக்குதலில் இருவர் காயமடைந்த நிலையில் பொலிஸாருக்கும் இளைஞர்களுக்குமிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தினால் அப்பகுதியில் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.
நேற்று(14.01.2026) இரவு 10மணியளவில் குருக்கள்மடம் முருகன் ஆலய வீதியில் சென்ற இளைஞர்கள் மீது போக்குவரத்து பொலிஸார் தாக்குதல் நடாத்தியதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
பொலிஸாரின் அராஜகமான செயற்பாடு
பிரதான வீதியில் வீதிச்சோதனை நடாத்திய நிலையில் உள்வீதியில் நின்ற போக்குவரத்து பொலிஸாரே இந்த தாக்குதலை நடாத்தப்பட்டுள்ளது.

போக்குவரத்து பொலிஸார் ரோச் லைட் அடித்து குறித்த மோட்டார் சைக்கிளை நிறுத்த முற்பட்டபோது அதனை மீறிச் சென்றவர்களை நிறுத்த முற்பட்டபோது இந்த நிலைமை ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ள போதிலும் அவர்களை தலைக்கவசத்தினால் தாக்கி இருவரும் மோட்டார் சைக்கிளிலிருந்து விழுந்த பின்னரும் பொலிஸார் தாக்கியுள்ளதாக அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாரின் தாக்குதலுக்குள்ளான இளைஞர்கள் செட்டிபாளையம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அப்பகுதிக்கு காரிலும் பொலிஸ் வாகனத்திலும் மேலதிக பொலிஸார் வரவழைக்கப்பட்ட நிலையில் அங்கிருந்த இளைஞர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர்களை நிறுத்துவதற்கு பல்வேறு வழிகள் உள்ளபோதும் தலைக்கவசத்தினால் தாக்குதல் நடாத்தியுள்ளதுடன் அவர்கள் விழுந்த நிலையிலும் தாக்குதல் நடாத்தியுள்ளதாகவும் இது பொலிஸாரின் அராஜகமான செயற்பாடுகள் எனவும் அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன்போது குறித்த இளைஞர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் பொலிஸாரினால் கொண்டு செல்லப்பட்டதுடன் தாக்குதல் தொடர்பில் இளைஞர்களினால் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



3ஆம் உலக போரின் தொடக்கமா? அணுகுண்டு வீச தயாராகும் ஈரான்; கிரீன்லாந்திற்கு அடம்பிடிக்கும் டிரம்ப் News Lankasri
Bigg Boss: ரெட் கார்டு குறித்து ஏன் கேட்கக்கூடாது? சான்ட்ராவின் நடிப்பை அம்பலப்படுத்திய போட்டியாளர்கள் Manithan