ட்ரம்ப் விதித்த கடுமையான வர்த்தக வரிக்கு மத்தியில் சீனாவின் புதிய உலக சாதனை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்த கடுமையான வர்த்தக வரி (Tariffs) நெருக்கடிகளுக்கு மத்தியிலும், சீனா தனது ஏற்றுமதியில் புதிய உலக சாதனையைப் படைத்துள்ளது.
2025ஆம் நிதியாண்டில் சீனாவின் வர்த்தக உபரி முதல் முறையாக 1.19 டிரில்லியன் டொலர் என்ற இமாலய இலக்கை எட்டியுள்ளது.
பெய்ஜிங் வெளியிட்ட அதிகாரப்பூர்வத் தகவலின்படி, ஒரு நாட்டின் ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்கும் இடையிலான வித்தியாசமான 'வர்த்தக உபரி', உலக வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு டிரில்லியன் டொலரைத் தாண்டியுள்ளது.
அமெரிக்காவைச் சார்ந்திருப்பதை
கடந்த 2024ஆம் ஆண்டில் இது 993 பில்லியன் டொலராக இருந்த நிலையில், தற்போது 20 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.
ட்ரம்பின் வர்த்தகப் போர் காரணமாக அமெரிக்காவுடனான சீனாவின் வணிகம் சற்று மந்தமடைந்தது.

இருப்பினும், அதனை ஈடுகட்டும் வகையில் தென்கிழக்கு ஆசியா, ஆபிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு சீனா தனது ஏற்றுமதியை மடைமாற்றம் செய்துள்ளது.
இதன் மூலம் அமெரிக்காவைச் சார்ந்திருப்பதை சீனா வெற்றிகரமாகத் தடுத்துள்ளது.
செயற்கை நுண்ணறிவு (AI), ரோபோட்டிக்ஸ் மற்றும் பசுமைத் தொழில்நுட்பப் பொருட்களின் அதீத விற்பனை காரணமாக இந்த வளர்ச்சி எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம்
சீன நாணயமான 'யுவான்' மதிப்பு சரிந்ததால், சர்வதேச சந்தையில் சீனப் பொருட்கள் மலிவாகக் கிடைத்தன.
சீன உள்நாட்டு சந்தையில் நிலவும் பொருளாதார மந்தநிலை காரணமாக, அந்நாடு வெளிநாடுகளில் இருந்து பொருட்களை வாங்குவதைக் குறைத்துக் கொண்டது (இறக்குமதி வெறும் 0.5% மட்டுமே உயர்வு).

இந்த அதீத வளர்ச்சி சீனாவுக்கு மகிழ்ச்சி தந்தாலும், இது ஒரு 'இருமுனை கத்தி' என்று பொருளாதார வல்லுநர் டெபோரா எல்ம்ஸ் எச்சரிக்கிறார்.
சீனப் பொருட்கள் மிகக் குறைந்த விலையில் உலகச் சந்தையைக் ஆக்கிரமிப்பதால், உள்ளூர் வணிகத்தைப் பாதுகாக்க ஐரோப்பா உள்ளிட்ட பல நாடுகள் சீனா மீது கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்க வாய்ப்புள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் 90-க்கும் மேற்பட்ட நாடுகள் மீது ட்ரம்ப் வர்த்தக வரிகளை விதித்தபோது உலகப் பொருளாதாரம் அதிர்ந்தது.
இருப்பினும், கடந்த அக்டோபரில் தென் கொரியாவில் ட்ரம்ப் மற்றும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் இடையிலான சந்திப்பிற்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் ஓரளவு தணிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
3ஆம் உலக போரின் தொடக்கமா? அணுகுண்டு வீச தயாராகும் ஈரான்; கிரீன்லாந்திற்கு அடம்பிடிக்கும் டிரம்ப் News Lankasri