யாழில் இடம்பெற்ற வாள் வெட்டு தாக்குதலில் இருவர் படுகாயம்
யாழ்ப்பாணம் – மந்திரிமனை கிராமத்தில் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு தாக்குதலில் இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வாள்வெட்டு சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
மோட்டார் சைக்கிளில் வருகை தந்தவர்களே ஆயுதங்களால் தாக்கியதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
இத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அத்துடன் யாழ்.தென்மராட்சி கெற்பேலி பகுதியில் இடம்பெற்ற தாக்குதலில் இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
தாக்குதலுக்கு இலக்கான 25 வயதான இளைஞர் காயங்களுடன் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் ஒருவரை கொடிகாமம் பொலிஸார் கைது செய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.