அமெரிக்காவில் வாகன விபத்து: இந்திய மாணவர்கள் இருவர் உயிரிழப்பு
அமெரிக்காவில் (America) இடம்பெற்ற சாலை விபத்தொன்றில் இந்திய (Indian) மாணவர்கள் இருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த விபத்து சம்பவமானது அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் கடந்த சனிக்கிழமையன்று (20) இடம்பெற்றுள்ளது.
விபத்தில், இந்தியாவின் தெலுங்கானாவைச் சேர்ந்த 19 வயதுடைய நிவேஷ் முக்கா (Nivesh Mukka) மற்றும் கௌதம் குமார் பார்சி (Goutham Kumar Parsi) என்னும் இரண்டு மாணவர்களே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்து சம்பவம்
இதன்போது விபத்தில் உயிரிழந்த மாணவர்கள் இருவரும் அரிசோனா பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் பொறியியல் இளங்கலை பட்டப்படிப்பினை (Bachelor of Computer Science) பயின்று வந்துள்ளதாக கூறப்படுகின்றது.
பல்கலைக்கழகத்தில் இருந்து கார் ஒன்றில் மூலம் அவர்கள் தங்கியிருந்த அறைக்கு திரும்பிக்கொண்டிருந்தபோது மாணவர்கள் பயணித்த கார், எதிரே வந்த ஒரு காருடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்நிலையில் சம்பவ இடத்திலேயே இந்திய மாணவர்கள் இருவரும் உயிரிழந்ததுடன், இரண்டு கார்களின் சாரதிகளும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைக்குப்பின் வீடு திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





சரிகமப சீசன் 5 போட்டியாளர் பாடிக்கொண்டிருக்கும் போதே அவரது வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகமான அரங்கம் Cineulagam

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் திடீர் மாற்றம்?... என்ன விஷயம் பாருங்க, ரசிகர்கள் வருத்தம் Cineulagam
