பட்டதாரிகளுக்கு கல்வி அமைச்சின் நற்செய்தி: அடுத்த வாரத்தில் நேர்முகப்பரீட்சை
தேசிய பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்குப் பட்டதாரிகளை நியமிப்பதற்கான, நேர்முகப் பரீட்சைகளை எதிர்வரும் வாரங்களில் நடத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் தேசிய பாடசாலைகளில் நிலவும் சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில மொழிமூல ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை நியமிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
பட்டதாரிகளை நியமிப்பதற்காக கடந்த மார்ச் மாதம் 2 ஆம் திகதி போட்டிப் பரீட்சையொன்று நடத்தப்பட்டது.
விண்ணப்பதாரர்களின் பட்டியல் மற்றும் அழைப்பு கடிதம்
இந்த போட்டிப் பரீட்சையின் பெறுபேறுகளுக்கமைய எதிர்வரும் 29ஆம் திகதி முதல் மே மாதம் 9ஆம் திகதி வரை கல்வி அமைச்சில் ஆட்சேர்ப்புக்கான நேர்முகப்பரீட்சைகளை நடத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
நேர்முகப் பரீட்சைக்கு தகுதியான விண்ணப்பதாரர்களின் பட்டியல் மற்றும் அழைப்புக் கடிதம் என்பன கல்வி அமைச்சின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

மனைவியை கொலை செய்ததற்காக சிறையில் இருந்த கணவர்.., திடீரென மனைவியை உயிரோடு பார்த்ததால் நடந்த திருப்பம் News Lankasri

ஆனந்தியின் கர்ப்பத்திற்கு யார் காரணம், வெளிவந்த உண்மை.. சிங்கப்பெண்ணே சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
