இந்திய கடற்றொழிலாளர் இருவருக்கு தொடர் விளக்கமறியல்!
இரணைதீவுக்கு அண்மித்த கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருந்த இரண்டு இந்திய கடற்றொழிலாளர்களையும் எதிர்வரும் 24 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
இன்று (17.03.2026), கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவான் பொன்னுத்துரை கிருசாந்தன் முன்னிலையில் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
படுகொலை செய்யப்பட்டதாக IDF விடுத்த அறிவிப்பு.. சற்றுமுன்னர் அலி லாரிஜானியின் எக்ஸ் தளத்தில் வெளியான பதிவு!
தொடர் விளக்கமறியல்
கடந்த 12.03.2026 அதிகாலை, கிளிநொச்சி பூநகரி இரணை தீவிற்கு அண்மித்த கடல் பகுதியில், சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இரு இந்திய கடற்றொழிலாளர்களையும் அவர்கள் தொழிலுக்கு பயன்படுத்திய படகினையும் கடற்படையினர் கைது செய்து, மேலதிக விசாரணைகளுக்காக கிளிநொச்சி மாவட்ட நீரியல் வளத்திணைக்களத்திற்கு ஒப்படைத்தனர்.

நீடித்த விசாரணையின் பின்னர், இருவரையும் கடந்த 12 ஆம் திகதி இரவு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியதையடுத்து, இன்று (17-03-2026) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
இந்நிலையில், இன்று(17) விசாரணையின் பின்னர், நீதிமன்றம் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 6 மணி நேரம் முன்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜோடியாக நடிக்க கதிர், சரண்யா துரடியின் சம்பளம், எவ்வளவு தெரியுமா Cineulagam
6 மாதம் தள்ளிப்போன விவாகரத்து வழக்கு.. நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam