டித்வா அனர்த்தத்திலிருந்து மீண்ட குடும்பத்துடன் புத்தாண்டு கொண்டாடிய அநுர
டித்வா சூறாவளியினால் சேதமடைந்த அநுராதபுரம் – கல்நேவ பகுதியைச் சேர்ந்த இந்திரஜித் சம்பத் சேனாரத்னவின் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இல்லத்தில் இன்று (14) நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஜனாதிபதி கலந்து கொண்டுள்ளார்.
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு சுபநேரச் சடங்குகள் இன்று (14.04.2026) காலை நாடளாவிய ரீதியில் கொண்டாடப்பட்டன.
கடந்த நவம்பர் மாதம் ஏற்பட்ட டித்வா அனர்த்தத்தினால் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டின் கீழ், ஐந்து மாத காலப்பகுதிக்குள் இந்த வீடு நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
புனரமைக்கப்பட்ட வீட்டில் புத்தாண்டு கொண்டாட்டம்
கல்நேவ பிரதேச செயலாளர் பிரிவில் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்காக நிர்மாணிக்கப்படும் ஆறு புதிய வீடுகளில் இதுவும் ஒன்றாகும். அத்துடன், இப்பிரதேச செயலாளர் பிரிவில் பகுதியளவில் சேதமடைந்த 66 வீடுகளுக்கான இழப்பீடுகளும் தற்போது வழங்கி முடிக்கப்பட்டுள்ளன.
இந்தப் பணிகளை விரைவுபடுத்தி, அனைத்து இலங்கை மக்களுக்கும் மகிழ்ச்சியான தருணமான சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டத்தின் மகிழ்ச்சியை பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் பெற்றுக்கொடுக்க முடிந்ததையிட்டு மகிழ்ச்சியடைவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
மேலும், பல்வேறு சவால்களுக்கு பின்னரும் ஏற்பட்ட உலகளாவிய நெருக்கடிகளுக்கு மத்தியிலும் தோல்வியை ஏற்றுக்கொள்ளாது மீண்டும் எழுந்து நிற்கும் இலங்கை மக்களுடன் ஒரே சுபநேரத்தில் ஒன்றிணையக் கிடைத்தமை பெரும் மகிழ்ச்சியளிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 5 மணி நேரம் முன்
6 மாதம் தள்ளிப்போன விவாகரத்து வழக்கு.. நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜோடியாக நடிக்க கதிர், சரண்யா துரடியின் சம்பளம், எவ்வளவு தெரியுமா Cineulagam
கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன? Manithan