ஹோர்முஸ் நீரிணையில் அத்துமீறும் எந்த நாட்டு கப்பலும் கைப்பற்றப்படும் - அமெரிக்கா கடும் எச்சரிக்கை
ஹோர்முஸ் நீரிணைக்கு கிழக்கே உள்ள ஓமன் வளைகுடா மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் அமெரிக்காவால் அறிவிக்கப்பட்டுள்ள முற்றுகை மண்டலத்திற்குள் அனுமதியின்றி நுழையும் எந்தவொரு கப்பலும் தடுத்து நிறுத்தப்பட்டு கைப்பற்றப்படும் என அமெரிக்க மத்திய கட்டளையகம் எச்சரித்துள்ளது.
எந்த நாட்டின் கொடியை ஏந்திய கப்பலாக இருந்தாலும், முறையான அனுமதியின்றி இந்த எல்லைக்குள் நுழையவோ அல்லது வெளியேறவோ முயன்றால், அவை வழிமறிக்கப்பட்டு, திசைதிருப்பப்பட்டு அல்லது சிறைபிடிக்கப்படும் என மாலுமிகளுக்கான அவசர அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானை இலக்கு வைத்து
அதேவேளை, ஈரான் அல்லாத பிற நாட்டுத் துறைமுகங்களுக்குச் செல்லும் அல்லது அங்கிருந்து வரும் நடுநிலையான கப்பல்களின் போக்குவரத்திற்கு இந்த முற்றுகை எவ்வித இடையூறையும் ஏற்படுத்தாது என்றும் அமெரிக்க இராணுவம் தெளிவுபடுத்தியுள்ளது.

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க நிர்வாகம் ஈரானை இலக்கு வைத்து மேற்கொண்டு வரும் இந்தத் தீவிரக் கண்காணிப்பு மற்றும் முற்றுகை நடவடிக்கைகள், வோஷிங்டன் மற்றும் தெஹ்ரான் இடையிலான பதற்றத்தை உச்சக்கட்டத்திற்குக் கொண்டு சென்றுள்ளன.