எண்ணெய் விநியோகத்தில் வரலாறு காணாத சரிவு - சர்வதேச எரிசக்தி முகமையின் எச்சரிக்கை
மத்திய கிழக்கில் நிலவும் போர் மற்றும் பதற்றமான சூழல்களைக் கருத்திற்கொண்டு, சர்வதேச எரிசக்தி முகமை (IEA) உலகளாவிய எண்ணெய் தேவை மற்றும் விநியோகம் குறித்த தனது முன்னறிவிப்புகளில் பாரிய குறைப்புகளை மேற்கொண்டுள்ளது.
எண்ணெய் பற்றாக்குறை மற்றும் எரிபொருள் விலை உயர்வு தொடர்ந்து நீடிப்பதன் காரணமாக, நுகர்வோர் தேவையில் நிரந்தர வீழ்ச்சி ஏற்படும் 'தேவை அழிவு' (Demand destruction) நிலை மேலும் பரவும் என பாரிஸை தளமாகக் கொண்ட இந்த சர்வதேச கண்காணிப்பு அமைப்பு எச்சரித்துள்ளது.
2026 ஆம் ஆண்டில் உலகளாவிய எண்ணெய் தேவை நாளொன்றுக்கு 80,000 பீப்பாய்கள் குறையும் என கணிக்கப்பட்டுள்ளது. இது கடந்த மாதம் கணிக்கப்பட்ட 640,000 பீப்பாய்கள் அதிகரிப்பு என்ற கணிப்புக்கு முற்றிலும் மாறான பாரிய வீழ்ச்சியாகும்.
பாரியளவு வீழ்ச்சி
இந்த ஆண்டு எண்ணெய் விநியோகம் நாளொன்றுக்கு 1.5 மில்லியன் பீப்பாய்கள் குறையும் என IEA எதிர்பார்க்கிறது.

கடந்த மாதம் இது 1.1 மில்லியன் பீப்பாய்கள் அதிகரிக்கும் என கணிக்கப்பட்டிருந்தது. இது கோவிட்-19 காலப்பகுதிக்கு பிந்தைய மிகப்பெரிய விநியோகக் குறைப்பு என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதத்தில் எண்ணெய் விலையானது அதன் வரலாற்றிலேயே மிகப்பெரிய மாதாந்த உயர்வைச் சந்தித்தது. இதனை "வரலாற்றிலேயே மிகக் கடுமையான எண்ணெய் விநியோக அதிர்ச்சி" என IEA வர்ணித்துள்ளது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போக்குவரத்துத் தடைகள் மற்றும் போர்ச் சூழலே இந்தத் திடீர் மாற்றங்களுக்குப் பிரதான காரணமாகக் கூறப்படுகின்றது.
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 7 மணி நேரம் முன்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜோடியாக நடிக்க கதிர், சரண்யா துரடியின் சம்பளம், எவ்வளவு தெரியுமா Cineulagam
ஹார்முஸ் முற்றுகையைக் கைவிடுங்கள்... ஈரானின் அதிரடி நகர்வால் ட்ரம்பிடம் கெஞ்சும் சவுதி அரேபியா News Lankasri
ஈரானில் இருந்து யுரேனியம் மீட்டு எடுக்கப்படும்: புதிய ஒப்பந்தம் குறித்து டிரம்ப் அதிரடி News Lankasri
கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன? Manithan